Home » இரண்டு இடங்களில் NPP அரசாங்கத்துக்கு படுதோல்வி!

இரண்டு இடங்களில் NPP அரசாங்கத்துக்கு படுதோல்வி!

Source

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள புலத்கொஹுபிட்டிய பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரவு செலவுத் திட்டத்தை புலத்கொஹுபிட்டிய பிரதேச சபையின் தலைவர் நிமல் ஜயரத்ன சபையில் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கலவான பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி தோல்வி!

கலவான பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபையைத் தெரிவுசெய்வதற்காக நேற்று (25) நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அணியைத் தோற்கடித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில், பணிப்பாளர் சபைக்கு 7 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக மொத்தம் 14 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இதில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 7 பேரும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் 7 பேரும் போட்டியிட்டனர்.

நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 7 வேட்பாளர்களும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினர். இதனால் தேசிய மக்கள் சக்தி அணியைச் சேர்ந்த எவருக்கும் பணிப்பாளர் சபையில் இடம்பிடிக்க முடியவில்லை.

இந்தத் தேர்தலில் பொதுச் சபையின் 100 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

The post இரண்டு இடங்களில் NPP அரசாங்கத்துக்கு படுதோல்வி! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both