Home » கஞ்சிபானியின் கூட்டாளி ரத்மலான சைமா கைது

கஞ்சிபானியின் கூட்டாளி ரத்மலான சைமா கைது

Source

பாதாள உலக குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரான் என்பவரின் மிக நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் “ரத்மலான சைமா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உள்ளிட்ட மூவர், மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய காவல்துறையும் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களையும் வழிநடத்துவதாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக, சர்வதேச குற்றப் புலனாய்வு அமைப்பான இன்டர்போல் ஏற்கனவே சிவப்பு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற கஞ்சிபானி இம்ரான், வெளிநாடுகளில் உள்ள தனது வலையமைப்பின் ஊடாக இலங்கைக்குள் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் மறைந்து கொண்டு சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் கஞ்சிபானி இம்ரானின் முக்கிய கூட்டாளிகள் மற்றும் விநியோகஸ்தர்களை இலக்காகக் கொண்டு, புலனாய்வு பிரிவுகள் இணைந்து பல்வேறு விசேட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

The post கஞ்சிபானியின் கூட்டாளி ரத்மலான சைமா கைது appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both