இலங்கையில் நடைமுறையில் உள்ள ஊழல் எதிர்ப்பு சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த புதிய சட்டமூலம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், தற்போதைய சட்டத்தில் பல புதிய சட்டப்பிரிவுகளைச் சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட உள்ளன.
இந்நடவடிக்கை, இலங்கையில் ஊழலை ஒழிக்கும் செயற்பாடுகளை மேலும் திறம்படவும் வலுவாகவும் முன்னெடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
The post ஊழல் எதிர்ப்பு சட்டத்தை வலுப்படுத்த புதிய திருத்தம் appeared first on LNW Tamil.