சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதியின் ஏழாவது மதிப்பீட்டிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஏழாவது மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது மதிப்பீட்டின் பின்னர், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post IMF பிரதிநிதிகள் விரைவில் இலங்கை வருகை appeared first on LNW Tamil.