Home » OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

Source

இலங்கையின் குளியலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக திகழும் OTTO Bathware நிறுவனம் இலங்கையின் தரக் கட்டளைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் Sri Lanka Standards (SLS) தரச் சான்றிதழை வென்றுள்ளது. OTTO குளியலறை சாதனங்கள் பாதுகாப்பு, நீண்ட கால பாவனை மற்றும் செயற்பாடு ஆகிய சகல துறைகளிலும் முழுமை பெற்றுள்ளமை இதன் மூலம் உறுதியாகின்றது. 30 ஆண்டு கால உற்பத்தி அனுபவத்துடன் OTTO Bathware, ADI குழுமம் (Art Decoration International தனியார் நிறுவனத்தின் www.ottobathware.com) கீழ் செயற்படுகின்றது. அதன் 435,000 சதுர அடி பரப்பளவு கொண்ட விசாலமான தொழிற்சாலை பண்டாரகம பகுதியில் அமைந்துள்ளது. தெற்காசியாவின் விசாலமான செரமிக் அலங்கார உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான மேற்படி நிறுவனம் இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய குளியலறை சாதன உற்பத்தி நிறுவனமுமாகும். நாடெங்கிலும் 500 இற்கும் மேற்பட்ட முகவர் நிறுவனங்கள் OTTO குளியலறை சாதனங்களை விற்பனை செய்கின்றன.

சில குளியலறை சாதன உற்பத்தியாளர்கள் செலவை குறைப்பதற்காக அவற்றின் எடை மற்றும் எரிதலை குறைப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அது உற்பத்திகளின் உறுதித்தன்மைக்கும் நீண்ட கால இருப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குளியலறை சாதனங்களின் உற்பத்திக்கு இன்றியமையாத இரண்டு காரணிகளாக அவற்றின் மூலப்பொருட்களும் LP எரிவாயும் விளங்குகின்றன. 1240C அளவுக்கு உயர் வெப்பம் குளியலறை சாதனங்களின் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. குறைந்த எடையிலான உற்பத்திகள் குறைந்த வெப்பத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுவதால் அவற்றில் வெடிப்புகள் ஏற்படக்கூடும். கொமட்களில் நீர் தேங்கியிருப்பதால் மேற்படி வெடிப்புக்குள் நீர் கசிவதோடு இறுதியில் அவை உடைந்து விடும் அபாயம் உள்ளது. அவ்வாறான உடைப்பின் போது துல்லிய செரமிக் துண்டுகள், பாதரசம் Lead (Pb) மற்றும் கெடீனியம் Cadmium (Cd) போன்ற பாதகமான இராசாயனங்கள் காரணமாக கடும் காயங்கள் ஏறபடக்கூடும். குளியலறை சாதனங்களின் எடையை தாங்கும் கொள்ளளவு, அழுத்த எதிர்ப்பு, கசிவு, பொறுத்தல் செயற்பாடு, இராசாயன எதிர்ப்பு மற்றும் தவறுகள் தொடர்பாக பரந்துபட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவகம் உறுதியுடன் செயற்படுகின்றது. OTTO குளியலறை சாதனங்கள் அந்த சகல பரிசோதனைகளிலும் தேர்ச்சி அடைந்துள்ளதாலேயே அதற்கு SLS சான்றிதழ் கிடைத்துள்ளது. “விலையை பற்றி மாத்திரம் நினைக்காமல் தரம் உறுதிப்படுத்தப்பட்ட, நீண்ட கால பாவனைக்கு உகந்த மேலான உற்பத்திகளை வாங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என OTTO நிறுவனத்தின் அதிபர் திரு எஸ்.எச்.பீ. கருணாரத்ன தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image