இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை இலங்கை வருகிறார். அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் உயர்மட்ட வெளிநாட்டு பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.