இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி உதித்த கயாஷான் குணசேகர இன்று பணிகளை பொறுப்பேற்றார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் விஜித்த ஹேரத் வழங்கினார். உதித்த கயாஷான் குணசேகர களனிப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை ஆய்வுத் துறையின் பீடாதிபதியாக பணியாற்றியுள்ளார்.
கூட்டுத்தாபனத்திற்கு வருகை தந்த புதிய தலைவரை வரவேற்கும் நிகழ்வு குமாரதுங்க கலையகத்தில் நடைபெற்றது.
மக்களுக்குத் தேவையான ஊடக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தலைவர் இந்த நிகழ்வின்போது தெரிவித்தார். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் ஊடக தர்மத்தைப் பேண வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்; தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தமிந்த குமாரவும் உரையாற்றினார். அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய வானொலி தற்போதும் மக்களுக்கு மகத்தான ஊடக பணியினை மேற்கொண்டுள்ளது. அதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் கூட்டுத்தாபனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதேவேளை, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர். அத்துடன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றறிற்கு தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியின் புதிய தலைவராக கலாநிதி பிரியந்த வெதமுல்ல நியமிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் விஜித ஹேரத் இவருக்கான நியமணக்கடிதத்தை வழங்கினார்.
கலாநிதி பிரியந்த வெதமுல்ல 2004ஆம் ஆண்டு நிகழ்சித் தயாரிப்பாளராக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார். இவர் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.