சதோச விற்பனை நிலையத்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏழு உணவுப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. செத்தல் மிளகாய் ஒரு கிலோவின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் புதிய விலை ஆயிரத்த 500 ரூபாய். கோதுமை மா ஒரு கிலோவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டள்ளது. இதன்படி புதிய விலை 230 ரூபாவாகும்.
பருப்பு ஒரு கிலோவின் புதிய விலை 339 ரூபாய். இது 19 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளைச் சீனி ஒரு கிலோவின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 218 ரூபாவாகும்.
உள்ளுர் சிவப்பு அரிசி ஒரு கிலோவின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 155 ரூபாவாகும். உள்ளுர் நாட்டரிசி ஒரு கிலோ 7 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 6 ரூபாவினாலும் குறைக்கப்பட்டள்ளன. இதன்படி உள்ளுர் நாட்டரிசி ஒரு கிலோ 188 ரூபாவிற்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 129 ரூபாவிற்கும் தற்போது விற்கப்படுகிறது.