நாட்டை கட்டியெழுப்புவதற்கு மக்களிடம் அரசியல் தலைமைத்துவம் தேவை!
நாட்டை கட்டியெழுப்புவதற்கு மக்களிடம் நெருக்கமாக உள்ள அரசியல் தலைமைத்துவம் ஒன்றே தேவை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பலமான அரசியல் பொறிமுறையைக் கட்டியெழுப்புவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீள கட்டியெழுப்ப முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் மூலம் ஜனாதிபதி பதவி கிடைத்தது. நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் குறித்து மக்களுக்கு சிறந்த அபிப்பிராயம் இல்லை.
நாட்டை கட்டியெழுப்ப திசைக்காட்டியுடன் ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.
நாட்டின் அரசியல் தலைமை குற்றவாளிகளிடம் இருந்தால், நாடு அராஜகத்திற்கு இட்டுச் செல்லப்படும்.
சில அரசியல்வாதிகள் அரசாங்கத்தை உருவாக்கும் போது ஏற்படுத்தும் நம்பிக்கை, அதனை முன்னெடுத்துச் செல்லும் போது, அற்றுக் போவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்போது, தவறான நபர்களுக்கு வாக்களித்துவிட்டதாக மக்கள் வருத்தம் அடைவர்.
நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வுகளை வழங்கக்கூடிய குழுவை கொண்ட பாராளுமன்றத்தை உருவாக்குவது மக்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.