இலங்கையின் முன்னணி தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் வழங்குநரான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், கொழும்பு 5 இலுள்ள தனது வைத்தியசாலை வளாகத்தில் பெப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஹெல்த் ஃபியெஸ்டா 2023 நிகழ்வை முன்னெடுத்தது.
லங்கா ஹொஸ்பிட்டலில் சிகிச்சை பெறுவோரக்கும் பொது மக்களுக்கும் இந்த ஹெல்த் ஃபியெஸ்டா 2023 கலந்து கொண்டு, அதில் வழங்கப்பட்ட பெருமளவான இலவச சேவைகள் மற்றும் சிறந்த விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் வழங்கப்பட்ட இந்தச் சேவைகளில், ECG பரிசோதனை, உடல் கொழுப்பு பகுப்பாய்வு, எழுமாற்றான குருதி சர்க்கரை பரிசோதனைகள், BMI பரிசோதனைகள், கண்பார்வை பரிசோதனைகள், வைத்திய ஆலோசனைகள், போஷாக்கு ஆலோசனைகள் மற்றும் பிசியோதெரபி ஆலோசனைகள் போன்றன வழங்கப்பட்டன.
நாட்டின் சிறந்த வைத்திய ஆலோசகர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இந்த ஹெல்த் ஃபியெஸ்டா 2023 இல் சேவைகளை வழங்கியதுடன், லங்கா ஹொஸ்பிட்டல்ஸிடமிருந்து தொடர்ச்சியான சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தம்மைப் பதிவு செய்து கொள்வோருக்கு, தனியார் வைத்தியசாலையொன்றினால் வழங்கப்படும் மிகச் சிறந்த டீல்களை பெற்றுக் கொள்ள முடிந்தது.
முழுக்குடும்பத்துக்குமான நிகழ்வாக ஹெல்த் ஃபியெஸ்டா 2023 திட்டமிடப்பட்டதுடன், இதில் சிறுவர்களுக்கான களிப்பூட்டும் செயற்பாடுகள் மற்றும் அனைவரும் மகிழக்கூடிய உணவு கொண்டாட்டமும் அடங்கியிருந்தன.