Home » சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது

சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது

Source

சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய விவகாரங்களிற்கான The Parliamentary Under-Secretary of State for Foreign Affairs அமைச்சர்களில் ஒருவரான லியோ டொச்செட்ரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையின் மனிதஉரிமைகள் நிலவரம் குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்கின்றது குறிப்பாக தமிழர்களின் நிலைமை குறித்து

அங்கு காணப்படும் நிலவரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனதை வருத்தும் விதத்தில் வலுவான விதத்தில் இங்கு முன்வைத்தார்கள்.

மனித உரிமைகள் விடயத்தில் முக்கிய பிரிட்டனின் கரிசனைக்குரிய 32நாடுகளில் ஒன்று இலங்கை பல விடயங்கள் தொடர்பில் நாங்கள் கரிசனை செலுத்துகின்றோம்

இலங்கையில் பல வருடகாலமாக காணப்படும் இன மத பதற்றங்களை தொடர்ந்து தமிழ் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவது ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது எங்கள் அனைவருக்கும் தெரியும்;.

பயஙகரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேசதராதரத்திலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக வாக்குறுதியளித்து வருகின்ற போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது- கடந்த வாரமும் பயன்படுத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும்..

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நினைவுகூரலிற்கு எதிரான பொலிஸாரின் கடுமையான நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் கண்காணித்தல்கள் மிரட்டல்கள் போன்றன இடம்பெறுகின்றன.குறிப்பாக இவை தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை இலக்குவைத்து இடம்பெறுகின்றன.

முன்னாள் போராளிகளும் காணாமல்போனவர்களின் உறவினர்களும் கண்காணிக்கப்படுகின்றனர் அச்சுறுத்தப்படுகின்றனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image