ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக தொடர்வதாக புடின் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் பரஸ்பர நலன்களுக்காகவும், பிராந்திய பாதுகாப்பிற்காகவும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெட்டாரி இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த வாழ்த்துரையை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
