Home » மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

Source
Share Button

.

மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீரற்ற காலநிலையினால் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 41 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 7 இடைத்தங்கல் முகாம்களில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களுத்துறை, காலி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்திருக்கின்றது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image