லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் வெடிப்புச் சம்பவங்கள்
லெபனானில் மீண்டும் ஒரு தொகுதி பேஜர் தொலைத்தொடர்பாடல் கருவிகள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இரண்டாவது தடவையாகவும் நிகழ்ந்த சம்பவங்களில், குறைந்தபட்சம் 20 பேர் பலியானதுடன், 450 பேர் வரை காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தலைநகர் பெய்ரூட், தென் லெபனான் உள்ளிட்ட இடங்களில் ஹிஸ்புல்லா ஆயுதபாணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியிருக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். இது இஸ்ரேல் செய்த வேலையென ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சுமத்துகிறது.