உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிகேவாவின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இதில் பங்கேற்பார்கள். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம், நாளை நடைபெறும் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்படும் என கடந்த வார கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.