சீன பௌத்த சங்கம் அன்பளிப்பாக வழங்கிய உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு
இலங்கையின் பௌத்த விஹாரைகளுக்கும், மக்களுக்கும் வழங்கியுள்ள நன்கொடை ரீதியிலான ஆதரவுகளுக்கு சீனாவில் உள்ள பௌத்த மக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள பௌத்த மக்கள் நன்கொடையாக வழங்கிய உலர் உணவுப் பொருட்களை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் இதுபற்றி கருத்து வெளியிட்டார். கங்காராம விஹாரையில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.