Home » ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், HNB உடன் இணைந்து Freedom Mortgage ஐ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், HNB உடன் இணைந்து Freedom Mortgage ஐ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது

Source
Share Button

நகர வாழிட அனுபவங்களில் புரட்சிகரமான அம்சங்களை வழங்கும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், TRI-ZEN தொடர்மனைகளுக்காக ‘Freedom Mortgage’ வசதியை மீள அறிமுகம் செய்துள்ளது. அதன் பிரகாரம், வாடிக்கையாளர் ஆரம்பத்தில் 20% கொடுப்பனவை மேற்கொண்டு, அடுத்த 6 மாதங்களுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. இதனூடாக, இல்லக் கொள்வனவாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட நிதிசார் நெகிழ்ச்சித்தன்மையை அனுபவிக்க முடியும்.

Freedom Mortgage என்பது சொத்துக்களின் உரிமையாண்மையுடன் தொடர்புடைய நிதிசார் சவால்களை இல்லாமல் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்மனையை கொள்வனவு செய்யும் கொள்வனவாளர்களுக்கு உடனடியாக அடைமான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் அழுத்தத்தை வழங்காமல், மகிழ்ச்சிகரமான அனுபவத்தை கொண்டிருக்கும் வசதியை வழங்குகின்றது. வதிவிட ரியல் எஸ்டேட் பிரிவில் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கான அடையாளமாக இந்த புத்தாக்கமான தீர்வு அமைந்துள்ளதுடன், பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், சொத்துகள் பிரிவு தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவருமான நதீம் ஷம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சில வருடங்களுக்கு முன்னர் நாம் அறிமுகம் செய்திருந்த அடைமானத் திட்டத்தை மீளவும் அறிமுகம் செய்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வட்டி வீதங்கள் குறைவடையும் நிலையில், ரியல் எஸ்டேட் முதலீட்டு பிரிவு தற்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக அதிகளவு வரி அறவிடப்படும் நிலையான வருமான மூலங்களை விட இந்தப் பிரிவு கவர்ச்சிகரமான தெரிவாக உள்ளது. வீட்டு உரிமையாண்மையைக் கொண்டிருப்பது தொடர்பான கனவுகளை எய்துவதற்கு தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நிதி அழுத்தமின்றி வலுவூட்டுவது என்பதில் TRI-ZEN ஐச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். முதல் ஆறு மாதங்களுக்கான வட்டிச் சுமையை பொறுப்பேற்றுள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணத்தையும், நிதிசார் நெகிழ்ச்சித் தன்மையையும் வழங்கி, அவர்களின் புதிய இல்லத்தில் நிம்மதியாக குடியமர்வதற்கு நாம் கைகொடுக்கின்றோம். இந்த மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கு வழங்கப்படும் சலுகையினூடாக அனுகூலம் பெற்றுக் கொள்வதற்கு சிறந்த காலமாக இது அமைந்திருப்பதுடன், HNB உடன் Freedom Mortgage ஐ கவர்ச்சிகரமான பக்கேஜில் பெற்றுக் கொள்ளக்கூடிய தருணமாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

HNB உதவி பொது முகாமையாளர் (பிரத்தியேக நிதிச் சேவைகள்) – காஞ்சன கருணாகம கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் நிலவிய பெரும் பொருளாதாரச் சவால்கள் மற்றும் சொத்துக்களின் விலைகளில் தளம்பல்கள் போன்றன சொத்துக்களை கொள்வனவு செய்யும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தவர்களுக்கு கடினமான சூழலை தோற்றுவித்திருந்தன. இலங்கையின் மாபெரும் தனியார் வங்கிகளில் ஒன்றாகத் திகழும் நாம், எமது வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் சிறந்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதில் எப்போதும் கவனம் செலுத்தியிருந்தோம். ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ் உடன் Freedom Mortgage பக்கேஜ் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நாம் மேற்கொண்டுள்ள இந்தப் பங்காண்மையினூடாக, வாடிக்கையாளர்களுக்கு நவீன இல்லமொன்றில் முதலீட்டை மேற்கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளதுடன், சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது என நாம் கருதுகின்றோம்.” என்றார்.

Freedom Mortgage இன் நியதிகளின் பிரகாரம், TRI-ZEN தொடர்மனையில் அடைமானம் பெறும் வீட்டுக் கொள்வனவாளர்களுக்கு, முதல் ஆறு மாத காலப்பகுதிக்கு வட்டி அறவிடப்படாது. வீட்டு உரிமையாண்மையின் ஆரம்பகட்டத்தில் நிதிசார் ஆதரவு வழங்கப்படுவதனூடாக, தமது புதிய TRI-ZEN தொடர்மனைக்கு கவலையின்றி மாறிக் கொள்ள முடியும்.

Freedom Mortgage இல் காணப்படும் நிதிசார் அனுகூலங்களுக்கு மேலதிகமாக, TRI-ZEN தொடர்மனைகளினூடாக நவீன மற்றும் நிலைபேறான வசிப்பிடப் பகுதிகள் வழங்கப்படுவதுடன், நகர வாழ்க்கைக்கு அவசியமான பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்யும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. TRI-ZEN அனுபவத்தில் நவீன உள்ளம்சங்கள், சூழலுக்கு நட்பான வடிவமைப்பு மற்றும் சுறுசுறுப்பான சமூகம் போன்றன வழங்கப்பட்டு வசிப்போருக்கு சிறந்த வாழ்க்கைத் தரம் உறுதி செய்யப்படுகின்றது.

நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கும் என்பதுடன், குடியிருப்பாளர்களுக்கு சௌகரியத்தையும், சொகுசான வாழ்க்கை முறையையும், கொழும்பு நகரின் மையத்தில் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். நகரிலிருந்து அப்பால் காணப்படக்கூடிய வசதிகளை TRI-ZEN கொண்டிருக்கும் என்பதுடன், இதில், பசுமையான பகுதிகள், ஜொகிங் திடல், நீச்சல் தடாகங்கள், சகல வசதிகளையும் கொண்ட உடற் பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய ஸ்ரூடியோக்கள் மற்றும் விளையாட்டு அறை போன்றன அடங்கியிருக்கும். வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த தொடர்மனைத் தொகுதி மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைந்திருப்பதற்கு, அதன் அமைவிடம் முக்கிய காரணியாக அமைந்திருக்கும். கொழும்பின் பிரதான பொது போக்குவரத்து வசதிகள், வியாபார மையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் இதர களிப்பூட்டும் பகுதிகள் போன்றவற்றை அண்மித்ததாக அமைந்துள்ளது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image